இலங்கை குழுவினர் மற்றும் பிற சேவைகளையே எதிரான நியாயமற்ற எதிர்ப்பு!
எனது இலங்கைச் சகோதரங்களே,
எமது நாட்டில் நிச்சயமற்ற இந்த நேரத்தில் தைரியம் மிக்க வீரர்கள் இந்த பயத்தினை அளிக்கும் வைரஸ்சிற்கு எதிராக எம்மை பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுள் முக்கியமானவர்கள் Srilankan Airlinesஇன் விமான சேவையில் ஈடுபட்டிருக்கும் சேவையாளர்கள். 10 வருடங்கள் இத்துறையிலே கடமையாற்றியவன் என்ற வகையில் இவர்கள் மீதான பாகுபாடு மற்றும் குற்றச்சாட்டுகள் என்னை கவலையுற வைக்கிறது.
பாதுகாப்புப் படைகள், மருத்துவத்துறை மற்றும் ஏனையோருடன் இணைந்து இவர்களும் தமது மற்றும் தமது குடும்பத்தாரின் உயிர்களைப் பணயம் வைத்தே தமது வேளைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செயற்படுவது எமக்காக மட்டுமே!
என்னுடன் கல்வி கற்ற எனது நண்பன் Farhan Haniffa தலைமையில் ஒரு குலாம் wuhanஇற்குச் சென்று இலங்கை மாணவர்களை அழைத்து வந்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம்.
இவ்வாறு தம்மையே அர்ப்பணித்து சேவையில் ஈடுபடும் இவர்களை வாழ்த்த முடியாவிடினும் அவர்களுக்கெதிராக குற்றச்சாட்டுகளை மேற்கொள்வதையும் மேலும் அவர்களை மற்றும் அவர்களது குடும்பங்களை ஒதுக்குவதனையும் கைவிடுங்கள். அவர்கள் எமது பழிச்சொல்லுக்குப் பொருத்தமானவர்கள் அல்ல. மேலும் எப்போதும் பாதுகாப்பாக இருங்கள்!
க்ரிஷ்மால் வர்ணசூரிய
#HealSL
#අපිශ්රීලංකන්
#ThinkSL